நம் வண்டியின் ஸ்பீடோ மீட்டரைப் பார்க்காமலேயே டிராபிக் போலீசார் ஓவர் ஸ்பீடு என்று அபராதம் கட்டச் சொல்வது எப்படி? நாம் போகும் வேகத்தை தூரத்திலிருந்தே அவர்கள் எப்படிக் கணிக்கின்றனர்? இந்த இடத்தில்தான் டாப்ளர் எஃபெக்ட் என்ற ஒப்பற்ற அறிவியல் அடிப்படை உதவுகிறது. அந்த அடிப்படையை ஆராய்ந்து உலகுக்குத் தந்தவர் ஆஸ்திரிய அறிவியல் மேதை கிறிஸ்டியன் டாப்ளர் (Christian Andreas Doppler). ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் நகரில் 1803ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி பிறந்தவர் டாப்ளர். இவர் தந்தை, கல் உடைக்கும் தொழிலாளி. இளவயதில் நோஞ்சான் குழந்தையாக இருந்ததால், தந்தையின் தொழிலிலி ருந்து தப்பித்தார் டாப்ளர். பள்ளிக் கல்வியை முடித்து, வியன்னாவிலும் சால்ஸ்பர்கிலும் வானியல் மற்றும் கணிதத்தைக் கற்றுத் தேர்ந்தார். பின் பிராகா பல்தொழில்நுட்பக் கல்லூரியில் பணியாற்றினார்.
அறிவியலில் அன்று ஆராயப்படாத துறைகள் அதிகம் இருக்க, அசையும் பொருள்கள் வெளிவிடும் ஒளியைப் பற்றி அதிகம் சிந்தித்தார் டாப்ளர். பைனரி ஸ்டார்ஸ் எனப்படும் இரட்டை விண்மீன்கள் வண்ண வண்ண ஒளியை வெளியிடுவது ஏன் என்பது பற்றி ஆராய்ந்து, தனது 39வது வயதில் ஓர் ஆய்வை அவர் வெளியிட்டார். ஒளியைப் பற்றி சிந்தித்த டாப்ளர், ஒலியின் பக்கமும் திரும்பினார். மிக சத்தமாக பாட்டு இசைத்துக் கொண்டே நெடுஞ்சாலையில் ஒரு கார் பறக்கிறதென்று வையுங்கள். அது நம் காதுகளுக்கு அனுப்பும் ஒலி அலை, தூரத்துக்குத் தக்கபடி, அந்தக் கார் பயணிக்கும் வேகத்துக்குத் தக்கபடி மாறுகிறதல்லவா? சிம்பிளாகச் சொல்லப் போனால், இந்தச் சிறு மாறுபாடுதான் டாப்ளர் எஃபெக்ட்.
இந்த ஒலி அலை மாறுபாட்டை வைத்தே தூரத்தில் செல்லும் ஒரு வாகனம் எவ்வளவு வேகத்தில் போகிறது, அது என்ன எடை கொண்ட வாகனம், எவ்வளவு உயரம் என எல்லாவற்றையும் கணக்கிட முடிந்தது டாப்ளரால். அட, டிராபிக் போலீஸ் வசூல் செய்ய மட்டுமல்ல... ராணுவக் களங்களில் எதிரியின் விமானம் அல்லது ஏவுகணை தம்மை நெருங்குவதை அறிந்து விழித்துக் கொள்ளவும் இந்த டாப்ளர் விளைவுதான் கைகொடுக்கிறது. இந்த ஒப்பற்ற கண்டுபிடிப்பு மட்டுமின்றி, கணிதம், இயற்பியல், இயந்திரவியல், வானியல் சார்ந்த 50க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி வெளியிட்ட டாப்ளர், வியன்னா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் ஆய்வு நிறுவனத் தலைவராகவும் உயர்ந்தார். சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்ட டாப்ளர், 1853ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி இத்தாலியின் வெனிஸ் நகரில் தனது 49வது வயதில் மரணமடைந்தார். விண்ணியலைத் தவிரவும் 12 அறிவியல் துறைகளில் அடிப்படையாக இருக்கும் டாப்ளரின் கண்டு பிடிப்பு, கண்டுபிடிப்புகளில் எல்லாம் ‘டாப்’ என்று அடித்துச் சொல்லலாம் அல்லவா!
Tuesday, 11 June 2013
நம் வண்டியின் ஸ்பீடோ மீட்டரைப் பார்க்காமலேயே டிராபிக் போலீசார் ஓவர் ஸ்பீடு என்று அபராதம் கட்டச் சொல்வது எப்படி? நாம் போகும் வேகத்தை தூரத்திலிருந்தே அவர்கள் எப்படிக் கணிக்கின்றனர்? இந்த இடத்தில்தான் டாப்ளர் எஃபெக்ட் என்ற ஒப்பற்ற அறிவியல் அடிப்படை உதவுகிறது. அந்த அடிப்படையை ஆராய்ந்து உலகுக்குத் தந்தவர் ஆஸ்திரிய அறிவியல் மேதை கிறிஸ்டியன் டாப்ளர் (Christian Andreas Doppler). ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் நகரில் 1803ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி பிறந்தவர் டாப்ளர். இவர் தந்தை, கல் உடைக்கும் தொழிலாளி. இளவயதில் நோஞ்சான் குழந்தையாக இருந்ததால், தந்தையின் தொழிலிலி ருந்து தப்பித்தார் டாப்ளர். பள்ளிக் கல்வியை முடித்து, வியன்னாவிலும் சால்ஸ்பர்கிலும் வானியல் மற்றும் கணிதத்தைக் கற்றுத் தேர்ந்தார். பின் பிராகா பல்தொழில்நுட்பக் கல்லூரியில் பணியாற்றினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment