Friday, 14 June 2013

அதிரை இளைஞர் கால்பந்துக் கழகம் நடத்தும் மாபெரும் கால்பந்து தொடர் போட்டி ! 14/06/2013

அதிரை இளைஞர் கால்பந்துக் கழகம் நடத்தும் மாபெரும் கால்பந்து தொடர் போட்டி !
அதிரை இளைஞர் கால்பந்துக் கழகம் நடத்தும் 19 ஆம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டியின் முதல் ஆட்டம் இன்று மாலை 5.30 மணியளவில் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.




இன்றைய முதல் ஆட்டத்தில் திருச்சி அணியினரோடு கண்டனூர் அணியினர் மோதினர். இதில் விறு விருப்புடன் நடந்த வந்த ஆட்டத்தின் இறுதியில் கண்டனூர் அணியினர் ஐந்து கோல் போட்டு 5-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர்.

முன்னதாக அதிரை பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட தி.மு.கழக முன்னோடிகள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு இன்றைய முதல் ஆட்டத்தை துவக்கி வைத்தனர்.

இன்றைய முதல் ஆட்டத்தைக் காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகை தந்து ரசித்தனர்

No comments:

Post a Comment