Tuesday, 11 June 2013

அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள், கைது செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும்! நாம் தமிழர் சீமான் கோரிக்கை!!

அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள், கைது செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும்! நாம் தமிழர் சீமான் கோரிக்கை!!
தென்னாட்டில் எங்கு குண்டு வெடித்தாலும் கோவை, நெல்லையில் வாழ்ந்து வரும் இஸ்லாமிய இளைஞர்களை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்து, விசாரணைக்கு... உட்படத்துவது ஏற்கத்தக்கதல்ல, இதனை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.
அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கர்நாடக மாநிலம் மல்லேஸ்வரத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டில் குறிப்பாக கோவையில் வசிக்கும் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதும், பின்னர்; தொடர்பற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது என்று குறிப்பி;ட்டுள்ளார்.
இது தொடர்பாக கோவை கோட்டைமேடு பகுதியில் சோதனை என்ற பெயரில் வந்த கர்நாடக காவல்துறையினர் எந்த பொருளையும் கண்டுபிடிக்காமல் திரும்பியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக பீர்முகமது என்பவருடன் தங்கியிருந்ததாக அலியப்பா என்பவரை கர்நாடக காவல்துறை பிடித்துச்சென்று யாருக்கும் தெரியாமலேயே காவலில் வைத்து விசாரித்துள்ளது என்று தெரிவித்துள்ள அவர், தென்னாட்டில் எங்கு குண்டு வெடித்தாலும் கோவை, நெல்லையில் வாழ்ந்து வரும் இஸ்லாமிய இளைஞர்களை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்து, விசாரணைக்கு உட்படத்துவது ஏற்கத்தக்கதல்ல, இதனை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இப்படிப்பட்ட அத்துமீறல்கள் தொடர்ந்தால் இந்திய சமூக வாழ்வில் இருந்து அன்னியப்படும் ஒரு மனநிலை முஸ்லீம் இளைஞர்களிடம் ஏற்பட்டுவிடும் என்பதையும் சீமான் எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment