Tuesday, 11 June 2013

இராமேஸ்வரம் 10/06/2013

இராமேஸ்வரம் பகுதியில் பலத்த காற்று! பாம்பன் பாலத்தில் செல்லும் ரயில்கள் மிக மெதுவாக இயக்கம்!!
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் கடந்த 2 நாட்களாக காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. காற்றின் காரணமாக கடல் அலைகளும் உயரமாக... எழுகின்றன. சுமார் 6 அடி உயரத்தில் கடல் அலைகள் எழுந்ததால்; நேற்று 2 பேர் அலையில் சிக்கி உயிர் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று மாலை காற்றின் வேகம் 50 கிலோ மீட்டர் அளவில் இருந்ததால் ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது. ராமேசுவரத்தில் இருந்து சென்னை புறப்பட்ட ரெயில், மதுரை பாசஞ்சர் ரெயில் போன்றவை பாதுகாப்பு காரணமாக பாம்பன் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன.
சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்ட ரெயில்கள் காற்றின் வேகம் குறைந்த பின்பு பாம்பன் பாலம் வழியே செல்ல அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் ரெயில்கள் மிக மெதுவாக ஊர்ந்த நிலைலேயே சென்றன.பலத்த காற்று காரணமாக ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
 
 

No comments:

Post a Comment