திஅரையில் நடைபெற உள்ள விநாயக சதூர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு !
இன்று 12/09/2013 மாலை விநாயக சதூர்த்தி ஊர்வலம் அதிரையின் முக்கிய பகுதிகளின் வழியாக கடந்து செல்ல இருப்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன் அதிரை காவல் துறையின் சார்பாக விநாயக சதூர்த்தி ஊர்வலம் நடத்தும் அமைப்பினர், அதிரையில் செயல்படும் அனைத்து சமூக அமைப்புகள், அதிரை வர்த்தக சங்க நிர்வாகிகள், அனைத்து மஹல்லாஹ் ஜமாத் நிர்வாகிகள் ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் நடந்து கொள்ளும்படி ஒத்துழைப்பு தருமாறு அனைவரையும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர்.
மேலும் அசம்பாவிதம் நடக்காதிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊர்வலம் செல்லும் பகுதிகளில் உள்ள கடைகளை அடைக்கும்படியும் காவல்துறையின் சார்பாக வர்த்தகர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆங்காங்கே கூட்டம் கூடி நிற்பதை தவிர்த்துக் கொள்ளும்படி காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்

No comments:
Post a Comment