Wednesday, 11 September 2013

முத்துப்பேட்டை கழிமுகப் பகுதியினை சுற்றுலா மையமாக்க நிதி ஒதுக்கீடு செய்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பாராட்டு தெரிவித்துள்ளது

INTJ: முத்துப்பேட்டை கழிமுகப் பகுதியினை சுற்றுலா மையமாக்க நிதி ஒதுக்கீடு செய்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பாராட்டு தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கழிமுகப் பகுதியினை சுற்றுலாப் பயணிகள் வந்து கண்டு களிக்கும் வகையில் மேம்படுத்தி அழகிய சுற்றுலா மையமாக உருவாக்குவதற்காக 2 கோடியே 17 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வரை பாராட்டுகிறோம். தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு எங்களது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் அச்சமின்றி வந்து செல்வது மிகவும் முக்கியம். அதனால் அப்பகுதியின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது முதல்வர் கடும் நடவடிக்கை எடுத்து அமைதியை நிலை நாட்ட வேண்டுகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். 

Read more at: http://tamil.oneindia.in/news/2013/09/11/india-thowheed-jamath-appreciates-jaya-183198.html

No comments:

Post a Comment